குமரி மாவட்டத்தில் கனிமவள கன ரக லாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 18 February 2024

குமரி மாவட்டத்தில் கனிமவள கன ரக லாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

கன்னியாகுமரி, பிப்.18, மாவட்டத்தில் வரும் செவ்வாய் கிழமை முதல் கனிம வள அதி கன ரக லாரிகள் காலை 06 மணி முதல் காலை 10 மணி வரையிலும், மதியம் 3 மணி முதல் இரவு 08 மணி வரை குமரி மாவட்டத்தில் நுழைய தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு. 


அதே போன்று கனிம வள காலி வாகனங்கள்(லோட் இல்லாமல்)  இரவு 09 மணி முதல் காலை 06 மணி வரை மட்டுமே குமரி மாவட்டத்தினுள் நுழைய அனுமதி. 

ஏற்கனவே குமரி மாவட்டத்தில் கனிம வள லாரிகள் நுழைய கூடாது என்று மாவட்ட நிர்வாகம் போட்ட உத்தரவிற்கு நீதிமன்றம் தடை விதித்தது, 


இதன் காரணமாக தற்போது முழு நேர தடை விதிக்காமல் நேரம் காலம் கொடுக்கப்பட்டு தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad