செய்துங்கநல்லூர் அருகே வாலிபரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 10 February 2024

செய்துங்கநல்லூர் அருகே வாலிபரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி அருகே உள்ள பரக்கை நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் ஐயப்பன் (30), இவர் இன்று பிற்பகல் 3 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகிலுள்ள அய்யனார்குளம் பட்டி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். 


அப்போது 3பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் உயிருக்கு பயந்து அவர், பைக்கை போட்டுவிட்டு தப்பி போட முயன்றுள்ளார். ஆனாலும், அந்த கும்பல் அவரை சுற்றி வளைத்து சராமாரியாக வெட்டினார்கள். 


இதில் ஐயப்பன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இது குறித்து தகவல் அறிந்த செய்தங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


மேலும் இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், சிவந்திபட்டியில் ஐயப்பனுக்கும் அன்பு என்ற அன்பன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாகவும், இதில் சிவந்திபட்டி காவல் நிலையத்தில் ஐயப்பன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்ததாகவும், இதனால் இந்த கொலை நடந்துள்ளதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. 


மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி, கொலையாளிகளை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad