தமிழக வெற்றி கழகத்திற்கு வந்த முதல் சோதனை ! கட்சியில் இருந்து பில்லா ஜெகன் நீக்கம்! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 10 February 2024

தமிழக வெற்றி கழகத்திற்கு வந்த முதல் சோதனை ! கட்சியில் இருந்து பில்லா ஜெகன் நீக்கம்!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் களப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிற சமயத்தில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பில்லா ஜெகன் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணிச் செயலாளராக பொறுப்பில் இருந்தவர் பில்லா ஜெகன், இவர் விஜய் ரசிகர் மன்றத் தலைவராக இருந்தவர். 

அவர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர் ஆவார். பில்லா ஜெகன் சமீபத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் சத்ரு சம்ஹார யாகம் நடத்தினார் அதில் இவர் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து மாவட்ட செயலாளர்களையும் அழைத்து கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.


2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற வேலை செய்ய வேண்டும், மக்களின் தேவை என்ன என்பதை அறிந்து செயல்படும் தலைவராக விஜய் இருப்பார் என்று புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார். இந்நிலையில் கட்சி, விஜய் மக்கள் இயக்கமாக செயல்படும் பொழுது தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்து வந்த பில்லா ஜெகன், விஜய் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், புதிய மாவட்டச் செயலாளராக எஸ்.ஜே.சுமன் என்பவரை நியமித்துள்ளது. இவர் பில்லா ஜெகனின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.


- தமிழக குரல் செய்திகளுக்காக-சுந்தரராமன் 

No comments:

Post a Comment

Post Top Ad