தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வபெருந்தகை எம்எல்ஏ பொறுப்பேற்றதையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் சார்பில் சாத்தான்குளம் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து புதிய பேருந்து நிலையம் முன்பாக பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட துணைத் தலைவர் சங்கர் தலைமை வகித்தார்.
வடக்கு வட்டாரத் தலைவர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் கிழக்கு வட்டார தலைவர் முத்துவேல், பேரூராட்சி உறுப்பினர் லிங்க பாண்டி, பன்னம்பாறை பஞ்சாயத்து தலைவர் அழகேசன், எழுவரைமுக்கி பஞ்சாயத்து தலைவர் ஜெயா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராஜ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் பாஸ்கர், கிராம காங்கிரஸ் தலைவர்கள் விஜயேந்திர பாண்டியன், சாலமோன் செல்லதுரை, பன்னம்பாறை ஊராட்சி எஸ்சி எஸ்டி கமிட்டி தலைவர் முத்தரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment