அதன் பேரில் மாவட்ட ஊராட்சி நிதியில் ரூ 14 லட்சம் மதிப்பில் கொம்மடிக்கோட்டை விசுவாசபுரத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவிலும், பொத்தகாலன்விளையில் ரூ24 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலைநீர்த்தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு ஒன்றியக்குழு தலைவர் ஜெயபதி தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தேவவிண்ணரசி, தெற்கு ஒன்றிய திமுக செயலர் பாலமுருகன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் இந்திரகாசி, சாஸ்தாவிநல்லூர் ஊராட்சித் தலைவர் திருக்கல்யாணி ஆகியேர் முன்னிலை வகித்தனர்..
சொக்கன்குடியிருப்பு பங்குதந்தை ஜாண்சன் ராஜ் ஆரம்ப ஜெபம் நடத்தினார். விசுவாசபுரம், பொத்தகாலன்விளையில் தனித்தனியாக அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் சாஸ்தாவிநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் லூர்துமணி, தெற்கு ஒன்றிய திமுக அவைத் தலைவர் ராஜபாண்டி, மாநில பொதுக்குழு முன்னாள் உறுப்பினர் பசுபதி, ஒன்றிய முன்னாள் துணை செயலர் ஜெயராமன், அமைப்பு சாரா ஓட்டுநரணி மாவட்ட துணை அமைப்பாளர் ரெனிஷ், ஒன்றிய மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ரோஸ்லீன் கலாவதி, மாவட்ட பிரதிநிதிஅந்தோணி ஜெயசீலன், ஒன்றிய கவுன்சிலர் செல்வம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தேவதாஸ், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் டொமினிக், மற்றும் ஆனந்தராஜ், ஜேசு அந்தோணி, ராஜ், துரைராஜ், ஜெயக்குமார், ஊர் பிரமுகர்கள் அந்தோணிராஜ், பிரம்மலிங்கம், ராஜசிங், அப்துல்ரகுமான், செல்வசந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment