தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் தலைமை வகித்தார்.கல்லூரி இயக்குனர் பேரா.ஜெயசந்திரன் வரவேற்றார். கூட்டத்தில் மாணவிகளுக்கு வன்கொடுமை, பாலியல் தொல்லை, போதைப் பொருள் உள்ளிட்ட பல்வேறு காரியங்களைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆலோசனை வழங்கப்பட்டன.
இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர் .ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் செல்வின், இயக்குனர் ஜெயசந்திரன் மற்றும் ஆசிரியர்கள் அலுவலர்கள் செய்திருந்தனர்.

No comments:
Post a Comment