ஸ்ரீவைகுண்டம் கே ஜி எஸ் மேல்நிலைப் பள்ளியில் விலை இல்லா சைக்கிள் வழங்கும் விழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 2 February 2024

ஸ்ரீவைகுண்டம் கே ஜி எஸ் மேல்நிலைப் பள்ளியில் விலை இல்லா சைக்கிள் வழங்கும் விழா.

தூத்துக்குடி மாவட்டம், பிப்.3, ஸ்ரீவைகுண்டம் கே ஜி எஸ் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் தமிழ்நாடு அரசு விலை இல்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. 


தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்குகிறது. அதன்படி இன்று ஶ்ரீவைகுண்டம் கே. ஜி. எஸ் மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் தியாகசெல்வம் தலைமை தாங்கி மிதிவண்டிகள் வழங்கினார். 


கல்வி அபிவிருத்தி சங்க செயலாளர் கோட்டை சண்முகநாதன் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் துணைத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி முன்னாள் பேரூராட்சி தலைவர் இந்த சிவசுப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


தலைமை ஆசிரியர் முத்து சிவன் வரவேற்பு நிகழ்த்தினார், பள்ளியில் பயிலும் 81  மிதிவண்டி வழங்கப்பட்டது, முடிவில் பட்டதாரி ஆசிரியர் முத்தையா நன்றி கூறினார். 

பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் துணை செயலாளர் இருளப்பன் உட்பட ஆசிரியர்கள் ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர், தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.

No comments:

Post a Comment

Post Top Ad