மூலவர் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு அதிகாலை 3மணிக்கு நடை திறக்கப்பட்டு 3.30 மணியளவில் விஸ்வரூபம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அபிஷேகமும் நடைபெற்றது. காலை 7.00 மணிக்கு மேல் பூஜை செய்த கும்பங்களுக்கு தீபாராதனை நடைபெற்று பின்னர் விமான தளங்களுக்கு கும்பங்கள் கொண்டு செல்லப்பட்டது. காலை 8 மணியளவில் மூலவர், ஷண்முகர், வள்ளி,தெய்வானை மற்றும் வெங்கடாசலபதி விமானங்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்று கோஷமிட்டனர். பிரதிஷ்டா தினத்தை முன்னிட்டு இன்று இரவு மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடைபெற்றது. நிகழ்ச்சியில் திருக்கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் திருக்கோயில் பேஷ்கார் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக-சுந்தரராமன்


No comments:
Post a Comment