சாயர்புரம் - கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 1,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 30 January 2024

சாயர்புரம் - கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 1,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு.

தூத்துக்குடி மாவட்டம், ஜன.30, சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 1,000/- அபராதம் விதித்து தீர்ப்பு.


சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவத்தையாபுரம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சுடலைமாடன் மகன் முருகன் (58) என்பவரை கடந்த 24.03.2017 அன்று முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் சாயர்புரம் புளியநகரைச் சேர்ந்த பெரியசாமி மகன் பொன்சேகர் (59) என்பவரை சாயர்புரம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். 


இவ்வழக்கை விசாரணை செய்த அப்போதைய சாயர்புரம் காவல் நிலைய ஆய்வாளர்கள் ஞானபிரகாசி மற்றும் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் ஆகியோர் புலன் விசாரணை செய்து கடந்த 16.06.2017 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.


இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம் இன்று (30.01.2024) குற்றவாளியான பொன்சேகர்  என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 1,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய சாயர்புரம் காவல் நிலைய ஆய்வாளர்கள் ஞானபிரகாசி மற்றும் கிங்ஸ்லி தேவ் ஆனந்த், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல் மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் இளையராஜா ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டினார்.

No comments:

Post a Comment

Post Top Ad