செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 30 January 2024

செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா.

தென்காசி மாவட்டம், ஜன.30, 
செங்கோட்டை எஸ்.ஆர்.எம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து பள்ளி மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதி வண்டி வழங்கும் விழா நடந்தது. 


விழாவிற்கு பள்ளி மேலாண்மை குழு தலைவா் மரியம் நவாஸ் தலைமைதாங்கினார். பெற்றோர் ஆசிரியா் சங்க தலைவா் பி.வி.நடராஜன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினா் எஸ்.சி.கல்யாணி ஆகியோர் முன்னிலை வகித்தனா். 

பள்ளி தலைமைஆசிரியா் தமிழ்வாணி அனைவரையும் வரவேற்று பேசினார். அதனைதொடா்ந்து நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் நகர்மன்ற தலைவா் எஸ்.எம்.ரஹீம் கலந்து கொண்டு பள்ளி மாணவியா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்தி பேசினார். 


விழாவில் சுமார் 382 மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள் மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா். முடிவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியா் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad