தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி யூனியன் உட்பட்ட புறையூர் ஊராட்சி மன்ற பகுதியில் தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே திட்டத்தில் ரூபாய் 11 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய நூலகம் திறப்பு விழா நடைபெற்றது.
நமக்கு நாமே திட்டத்தில் நாலுமாவடி புது வாழ்வு சங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கு நிதி பங்கீடாக ரூ. 3,67,000 வழங்கப்பட்டு புதிய கட்டிடமும் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு ஆழ்வார்திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் செல்வக்குமார், துணைத் தலைவர் மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் புதிய நூலக கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் ஊராட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment