தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அடுத்த வாகைகுளம் சுங்க சாவடியில் இவ்வாண்டு இதுவரை ரூ.179.25 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுகன் கிறிஸ்டோபர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விகளுக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அளித்துள்ள பதிலில், "திருநெல்வேலி-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாகைகுளம் சுங்க சாவடியில் செப்டம்பர் மாதம் வரை ரூ.179.25 கோடி வசூல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திருநெல்வேலி-தூத்துக்குடி நெடுஞ்சாலையில் ஒப்பந்ததாரர் மூலம் 2019 முதல் 2023 வரை சாலை பராமரிப்புக்கு ரூபாய் 10.70 கோடி செலவு அளித்துள்ளதாக தகவல் அளித்துள்ளனர்.
திருநெல்வேலி-தூத்துக்குடி சாலை வல்லநாடு பாலத்தில் சேதமடைந்த பகுதிகளை பழுதுபார்த்தல், புனரமைத்தல் மற்றும் பலப்படுத்துதல் ஆகியவற்றின் பணி ரூ. 13.22 கோடி பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment