குருகாட்டூர் - மாமனாருக்கு கொலை மிரட்டல் - மருமகன் கைது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 6 November 2023

குருகாட்டூர் - மாமனாருக்கு கொலை மிரட்டல் - மருமகன் கைது.

தூத்துக்குடி மாவட்டம், குருகாட்டூர் பகுதியில் மாமனாரிடம் தகராறு செய்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மருமகன் கைது.


ஆழ்வார்திருநகரி சோழியகுறிச்சி பகுதியைச் சேர்ந்த வெள்ளையா மகன் முத்துகிருஷ்ணன் (43) என்பவருக்கும் அவரது மனைவிக்குமிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையில் கடந்த 01.11.2023 அன்று முத்துகிருஷ்ணனின் மனைவி ஆழ்வார்திருநகரி குருகாட்டூர் மேலூர் பகுதியில் உள்ள தனது தந்தை மேகநாதன் (எ) சடகோபால் (70) என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.


இதனால் ஆத்திரமடைந்த முத்துகிருஷ்ணன் கடந்த 03.11.2023 அன்று தனது மாமனார் மேகநாதன் (எ) சடகோபால் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.


இதுகுறித்து மேகநாதன் (எ) சடகோபால் நேற்று அளித்த புகாரின் பேரில் ஆழ்வார்திருநகரி காவல் நிலைய ஆய்வாளர் ஸ்டெல்லா பாய் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு முத்துகிருஷ்ணனை கைது செய்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad