திருச்செந்தூார் முருகன் கோவிலில் இந்த சஷ்டி திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆய்வு ஆய்வு செய்தார்!. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 5 November 2023

திருச்செந்தூார் முருகன் கோவிலில் இந்த சஷ்டி திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆய்வு ஆய்வு செய்தார்!.


திருச்செந்தூார் முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்
 ஆய்வு செய்தார்!


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழா இவ்வாண்டு வருகின்ற 13.11.2023  முதல் தொடங்கி 19.11.2023 அன்று வரை கந்த சஷ்டி பெருந்திருவிழா நடைபெற உள்ளது. 


இதில் தமிழகம் மற்றுமில்லாமல் வெளிநாடுவாழ் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய திருவிழாவான சூரஸம்ஹாரம் 18-ம் தேதி நடைபெறுகிறது அடுத்த நாள் 19-ம் தேதி  திருக்கல்யாண வைபவமும் கோலகலமாக நடைபெற உள்ளது. இந்த கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  நேற்று (04.11.2023) திருச்செந்தூர் பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடங்களுக்கு நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.


இந்த ஆய்வின்போது திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர்  வசந்தராஜ், ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் மாயவன், திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய ஆய்வாளர் தர்மர், மற்றும் திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன், தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், போக்குவரத்துப் பிரிவு உதவி ஆய்வாளர் கணேச மணிகண்டன் உட்பட காவல்துறையினர் மற்றும் திருச்செந்தூர் கோவில் உதவி பாதுகாப்பு அலுவலர்  ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



- தமிழக குரல் செய்திகளுக்காக சுந்தரராமன்

No comments:

Post a Comment

Post Top Ad