நாசரேத்தில் - உதயநிதி பிறந்த நாள்விழா. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 27 November 2023

நாசரேத்தில் - உதயநிதி பிறந்த நாள்விழா.

தூத்துக்குடி மாவட்டம், நவ 27. நாசரேத் பேரூர் தி.மு.க.வும், நாசரேத் பேரூர் இளைஞரணியும் இணைந்து, கழக இளைஞர் அணி செயலாளர், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.


இந்த பிறந்தநாள் விழாவில் முன்னாள் அவைதலைவர் அருள்ராஜ் கழக கொடி ஏற்றினார். வெடி வெடித்து பொது மக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. பேரூர் கழக செயலாளர் ஜமீன் சாலமோன், பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் பிரதிப் மற்றும் துணை அமைப்பாளர் ஜாண்பென்சன் ஆகியோர் தலைமை தாங்கினர். 


நகர அவைத்தலைவர் கருத்தையா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பேரின்பராஜ் லாசரஸ், மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் செல்லத்துரை முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மூக்குப்பீறி கிளை கழக செயலாளர் அருள்ராஜ் ஜெபகிருபை மற்றும் ஒன்றிய இளைஞரணி ஏசாதுரை, காட்சன்ஜேக்கப், கிதியோன் கலந்து கொண்டனர். 


பிறந்தநாளையொட்டி இன்று காலை முதியோர் இல்லத்திற்க்கு உணவு வழங்கப்பட்டது. மதியம் சிறுவர் இல்லத்திற்க்கும், கிருபை இல்லத்திற்க்கும் பிரியாணி வழங்கப்பட்டது. இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி அன்பு தங்கபாண்டியன். முருகதுரை, ஒன்றிய பிரதிநிதி மாணிக்கராஜ், ஞானராஜ், ஹரிஸ்ரவி ராமசந்திரன், நகர தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், மற்றும் வார்டு செயலாளர்கள் உடையார். ஜேம்ஸ்ரவி, சரவணன், இளங்கோ, டேவின் சாலமோன், சேகர், சிலாக்கியமணி, மனோகரன், ஜெபசிங், சிமியோன் மகளிர் அணி செயலாளர் கஸ்தூரி, ஜெசி மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் இந்திராணி, ஜீலியட், மலர்விழி வாண்டு பிரதிநிதிகள் சாமுவேல், எஸ்டான்லி, கிருஷ்ணகுமார், மென்சன், ஜோசப் ஞானராஜ், ராபின், சதா, ரவி, பரந்தாமன், திருமணி மற்றும் பலர் கலந்து
கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad