தூத்துக்குடி - புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது - ரூபாய் 3,10,400/- மதிப்புள்ள 374 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 27 November 2023

தூத்துக்குடி - புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது - ரூபாய் 3,10,400/- மதிப்புள்ள 374 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்.

தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவர் கைது - ரூபாய் 3,10,400/- மதிப்புள்ள 374 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்.


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் மற்றும் தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர் முத்துப்பாண்டி, தென்பாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தூத்துக்குடி உட்கோட்ட தனிப்படை போலீசார் ஆகியோர் நேற்று (26.11.2023) தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள தாவீது மகன் அருள்(50) என்பவரது பலசரக்கு கடையில் சோதனை மேற்கொண்டபோது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.


உடனே மேற்படி தனிப்பட போலீசார் எதிரி அருள் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த ரூபாய் 3,10,400/- மதிப்புள்ள 374 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad