நாசரேத் - காவல் துறை மற்றும் நகர வணிகர் சங்க ஆலோசனை கூட்டம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 27 November 2023

நாசரேத் - காவல் துறை மற்றும் நகர வணிகர் சங்க ஆலோசனை கூட்டம்.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத், காவல் நிலையத்தில்  காவல் ஆய்வாளர் ஜெயசீலன் தலைமையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைகள் சட்டவிரோதமாக கடத்துதல் மற்றும் விற்பனை செய்வதை தடுத்தல் சம்பந்தமாக நாசரேத் சில்லரை மற்றும் மொத்த கடை வியாபாரிகள் மற்றும் கொரியர், பார்சல் சேவை நடத்தும் உரிமையாளர்கள் அனைவரையும் அழைத்து நகர வணிகர் சங்கத்துடன் வைத்து ஆலோசனை கூட்டம் நாசரேத் காவல் நிலையத்தில் வைத்து  இன்று 27.11.2023 நடைபெற்றது.


இக்கூட்டத்தில் நாசரேத் காவல் நிலைய எல்கைக்குள் உள்ள அனைத்து சில்லரை மற்றும் மொத்த விற்பனை கடைகளிலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைகள் விற்பனை செய்ய தடை உள்ளது என்ற விபரம் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது.


தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மேற்படி குட்கா, புகையிலை போன்ற போதை வஸ்துக்களை விற்பனை செய்வதாக தெரிய வந்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விபரம் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது.


மேலும் வெளியூர்களில் இருந்து அந்நிய நபர்கள் யாரேனும் காவல் நிலைய எல்கைக்குள் வந்து மேற்படி போதை வஸ்துக்களை கொண்டு வந்து விற்பணை செய்ய முற்பட்டாலோ, விற்பனை செய்தாலோ உடனடியாக காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு 9498101862 தகவல் தெரிவிக்கவும். தகவல் தெரிவிப்பவர்களின் பெயர் மற்றும் விபரம் இரகசியமாக வைக்கப்படும்.


அரசு விதிமுறையை மீறி மேற்படி போதை வஸ்துக்களை விற்பனை செய்யும் கடைகள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கொண்டு உடனடியாக மேற்படி கடைகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விபரம் தெரிவிக்கப்பட்டது.


நாசரேத் நகர வணிகர் சங்கம் சார்பில் தலைவர் ஜெபஸ் திலகராஜ், செயலாளர் செல்வன், பொருளாளர் அகிலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad