பொருநை அய்கோ தலைமையில் உரை நிகழ்த்தினார், சமூக ஆர்வலர் ஏரல் ஜெயபாலன் நோக்க உரை ஆற்றினார், அவர் பேசுகையில் தாமிரபரணி ஆற்று நீரை தனியாருக்கு தாரை வார்க்கும் விதமாக அதிகாரிகள் ஊக்குவித்து வருவதாகவும், வாழவல்லான் சுற்று வட்டார பகுதியில் லட்சக்கணக்கான மக்களின் குடுபங்களின் நிலையும், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதையும் விளக்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கூட்டமைப்பை சேர்ந்த தஞ்சை காவிரி பி ஆர் பாண்டியன் கலந்து கொண்டார், இயக்கத்தின் கருத்தாளராக வியணரசு ஆர்ப்பாட்ட முழக்கங்களை முழங்கினார், இயக்கத்தின் தலைவர் அய்கோ பேசுகையில் ஆளுங்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பிரதிநிதிகள் ஆகியோர் வாழவல்லான் குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட குடிநீரை தனியார் கம்பெனிக்கு விற்றுவிட்டு அப்பகுதி மக்களுக்கு தேவையான குடிநீரை திருவைகுண்டத்தில் இருந்து லாரி மூலம் கொண்டு வந்து சப்ளை செய்து வருவதை தடை செய்ய வேண்டும் எனவும் குடிநீர் ஆதாரங்களில் கழிவு நீர் கலப்பதை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்றும் மாவட்ட மற்றும் மாநில அரசுக்கு தனது கண்டனங்களை தெரிவித்தார்.
மேலும் சுற்று பகுதியில் உள்ள 13 பேரூராட்சி மற்றும் சிற்றுறாட்சி தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித பயனும் இல்லை எனவே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பு செய்வதாகவும் அவர் தெரிவித்தார். இப்போராட்டத்திற்கு சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்ட முழக்கங்களை முழங்கி தங்கள் எதிர்ப்பை அரசுக்கு தெரியப்படுத்தினர்.

No comments:
Post a Comment