நாசரேத்தில் இரு வேறு பகுதிகளில் சாலை விபத்து. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 2 October 2023

நாசரேத்தில் இரு வேறு பகுதிகளில் சாலை விபத்து.


நாசரேத் அடுத்த முதலைமொழி பகுதியில் மாலை 3.00 மணி அளவில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான மினி லாரி நாசரேத் நோக்கி வந்து கொண்டிருந்தது, அந்த லாரியின் பின்புறம் வந்த பயணிகள் ஆட்டோ வந்து கொண்டிருந்த நிலையில் முன்னால் சென்ற லாரி தீடிர் என ப்ரேக் போட்டதில், பின்னால் வந்த ஆட்டோ எதிர்பாரா விதமாக மோதியதில் ஆட்டோவின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. இதில் வேறு யாருக்கும் பாதிப்பு இல்லை.

மேலும், இன்று மாதத்தின் கடைசி சனி கிழமை என்பதால் நாலுமாவடியில் உள்ள ஜெப கூட்டம் முடிந்து நாகர்கோவில் செல்லும் பயணிகள் பேருந்து மாலை 5 மணி அளவில் நாசரேத் பேருந்து நிலையம் கடந்து வரும் போது எதிர்பாரா விதமாக எதிரே வந்த லாரி உரசியதில் வலது பக்கத்தில் உள்ள ஜன்னல் கண்ணாடி உடைந்தது இருந்த போதிலும் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, சிறிது நேரத்திர்க்கு பின் அப்பகுதியில் போக்குவரத்து சரிசெய்யபட்டது.


எனவே இது போன்ற விபத்துகளை தடுக்க தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்ய வேண்டும் என பொது மக்கள் கேட்டு கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad