அதிகாலை 5 மணி அளவில் கணபதி ஹோமம் ஆரம்பமாகி , 6 மணியளவில் கணபதி ஹோம பூர்ணாஹுதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து துர்கா சப்தசதி பாராயணம் நடைபெற்றது. பின்னர் 10 மணியளவில் சண்டி ஹோமம் ஆரம்பமாகி 12 மணியளவில் பூர்ணாஹுதி நடைபெற்றது. பூர்ணாஹுதியில் பட்டுபுடவை மற்றும் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை போன்று 12 வகையான பழ வகைகள் ஹோமத்தில் போடபட்டது. அது மட்டுமில்லாமல் இனிப்பு வகையில் அதிரசம்,லட்டு, சர்க்கரை பொங்கல் போன்று 12 வகையான இனிப்பு பட்சணங்கள் பூர்ணாஹுதியில் போடப்பட்டது.
அதனை தொடர்ந்து சுவாசினி பூஜை, சுமங்கலி பூஜை மற்றும் யந்திர பூஜை நடைபெற்றது. பின்னர் மஹா தீபாராதனை நடைபெற்றது. பூஜை செய்த கும்பங்களில் உள்ள தீர்த்தத்தை துர்கை அம்பாளின் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அபிஷேக தீர்த்தம், விபூதி, சந்தனம்,குங்கும பிரசாதம் மற்றும் புளியோதரை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக- சுந்தரராமன்


No comments:
Post a Comment