பள்ளி கல்வித்துறை குடியரசு தின வருவாய் மாவட்ட தடகளப் போட்டிகள் - சாத்தான்குளம் பள்ளி மாணவர் மாநில போட்டிக்கு தகுதி. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 10 October 2023

பள்ளி கல்வித்துறை குடியரசு தின வருவாய் மாவட்ட தடகளப் போட்டிகள் - சாத்தான்குளம் பள்ளி மாணவர் மாநில போட்டிக்கு தகுதி.

தூத்துக்குடி, பள்ளி கல்வித்துறை குடியரசு தின வருவாய் மாவட்ட தடகளப் போட்டிகள் 2023-24 ஆம் ஆண்டுக்கான போட்டிகள் தூத்துக்குடி தருவை மைதானத்தில் 06/10/23 அன்று நடைபெற்றது.


அப்போட்டியில் T.N.D.T.A RMP புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி IX A பயிலும் மாணவன் ப.ஆகாஸ் 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் 100m ஓட்ட போட்டியில் இரண்டாம் இடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 


அம்மாணவனுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் B. வசந்த், R. ராஜேஷ் ஜெபசீலன், J. அக்னஸ், ஆகியோரை பள்ளி தாளாளர் V. டேவிட் வேதராஜ், தலைமையாசிரியர் திரு D. ஜெபசிங் மனுவேல், மற்றும் ஆசிரிய - ஆசிரியைகள், அலுவலர்கள் மாணவ மாணவிகள் பாராட்டினர்.

No comments:

Post a Comment

Post Top Ad