தூத்துக்குடி - பழிக்கு பழியாக தலை துண்டித்து ஒருவர் கொலை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 22 October 2023

தூத்துக்குடி - பழிக்கு பழியாக தலை துண்டித்து ஒருவர் கொலை.

தூத்துக்குடி, TMB காலனி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன்(43), இவர் கடந்த ஏப்ரல் மாதம் 23- ம் தேதி அன்று அண்ணாநகர் சலவை காலனியில் சப்பாணி முத்து என்பவரை தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 


சிறையில் இருந்து ஒரு மாதத்திற்கு இடையில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை இவரை தூத்துக்குடி மையவாடி பகுதியில் வைத்து ஒரு கும்பல் தலையை துண்டித்து கொலை செய்து, தலையை ஏற்கனவே சப்பானிமுத்து கொலை செய்யப்பட்டு கிடந்த சலவை கூடத்தில் உள்ள விநாயகர் கோயில் முன்பு போட்டுவிட்டு சென்றுள்ளது.


இதுகுறித்து தகவலறிந்த தென்பாகம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், ஏற்கனவே நடந்த கொலை சம்பவத்துக்கு பழிக்கு பழியாக தலை துண்டித்து கொலை கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad