தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தின் மிஷனரிகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது . - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Tuesday, 10 October 2023

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தின் மிஷனரிகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது .

.com/img/a/

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தின் 20-வது ஆண்டு ஸ்தோத்திரப் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் தென்னிந்திய திருச்சபைகளை உருவாக்கிய மிஷனெரிகளின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக அனைத்து சி.எஸ்.ஐ.ஆலய ஆராதனைகளில் குடும்பங்களின் ஒரு நாள் வருமான காணிக்கை படைத்தல் நடைபெற்றது. 


மற்றும் திருமண்டலத்திற்குட்பட்ட கல்வி நிறுவனங்களில் ஊழியர்களின் ஒருநாள் வருமான காணிக்கைப் படைத்தல் நடைபெற்றது. செவ்வாய்கிழமை (10.10.2023) அன்று தூத்துக்குடி மாவட் டத்தில் திருச்சபைகளை உருவாக்கிய மிஷனெரிகளின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.


மிஷனெரிகளை நினைவு கூறும் பவனி தூத்துக்குடி டூவிபுரம் தூய யாக்கோபு ஆலயத்திலிருந்து 20 ககும் மேற்பட்ட வாகனங்களில் புறப்பட்டு சாயர்புரம், நாசரேத், முதலூர் ஆகிய ஊர்களில் உள்ள மிஷனரி நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினர். 


இந்நிகழ்வில் திருமண்டல உபதலைவர் தமிழ்ச்செல்வன், லே செய லாளர் நீகர் பிரின்ஸ் கிப்ட் சன், குருத்துவச் செயலாளர் இம்மானுவேல் வான்ஸ்றக், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜசிங், துவக்க, நடுநிலைப் பள்ளிகளின் மேலாளர் ஜேஸ்பர் அற்புதராஜ், சபை மன்றத் தலைவர்கள் வெல்ற்றன் ஜோசப், ஞானையா, அகஸ்டின் கோயில்ராஜ், நாசரேத் தூய யோவான் பேராலய தலைமைப் பாதிரியார் ஹென்றி ஜீவானந்தம், குருவானவர்கள் டேவிட், ஜாலி, திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள், சேகர கமிட்டி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


ஸ்தோத்திரப் பண்டிகைக்கான ஏற்பாடுகளை பேராயர் பொறுப்பு பிரதம பேராயரின் ஆணையாளருமான பேராயர் தீமோத்தேயு ரவீந்தர் தலைமையில் திருமண்டல உபதலைவர் தமிழ்ச்செல்வன், லே செயலாளர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், குருத்துவச் செயலாளர் இம்மானுவேல் வான்ஸ்றக் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad