முத்தையபுரம் - குழாய் பதிப்பதற்காக குழி தோண்டும் பணியின் போது சிக்கிய வட மாநில தொழிலாளர்கள். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 19 October 2023

முத்தையபுரம் - குழாய் பதிப்பதற்காக குழி தோண்டும் பணியின் போது சிக்கிய வட மாநில தொழிலாளர்கள்.

தூத்துக்குடி மாவட்டம், முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குழாய் பதிப்பதற்காக குழி தோண்டும் பணியில் ஈடுபட்டபோது மண் சரிந்ததில் குழியில் சிக்கி புதையுண்ட 4 புலம்பெயர் தொழிலாளர்களை உடனடியாக காப்பாற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த உதவி ஆய்வாளர் ராஜபிரபு தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் பாராட்டு.



முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் மெயின் ரோடு பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியின் எதிரே ஐஓசிஎல் (IOCL) குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று (18.10.2023) இந்த குழாய் பதிக்கும் பணியில் உத்திரபிரதேசம் பாட்வாலியா ரோடி பகுதியை சேர்ந்த அசோக் சர்மா மகன் ஓம் பிரசாத் (26), பீகார் முசாபர்நகர் பகுதியை சேர்ந்தவர்களான ஹரிராம் நாத் ஷா மகன் ஹரிராம் பிரசாத் (38), கட்டிவன் ஷா மகன் பிரசாத் (29) மற்றும் பீகாரை சேர்ந்த வக்கீல்கிரி மகன் ரிக்தேஷ் (25) ஆகியோர் வேலை செய்து கொண்டிருக்கும்போது நேற்று பெய்த மழையின் காரணமாக அந்த குழி இடிந்து விழுந்துள்ளது. இதில் மேற்படி 4 பேரும் குழிக்குள் சிக்கி புதையுண்டனர்.


அப்போது அவ்வழியாக வந்த உதவி ஆய்வாளர் ராஜபிரபு, காவலர்கள் சுடலைமணி சண்முகையா கதிரவன் டேவிட் ராஜன் மற்றும் சக்தி மாரிமுத்து ஆகியோர் அடங்கிய மாவட்ட எஸ்.பி தனிப்படை போலீசார் மனிதநேயத்துடன் உடனடியாக அந்த குழிக்குள் இறங்கி சரிந்த மண்னை தோண்டி அகற்றி, அதில் சிக்கியிருந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்துள்ளனர்.


மேற்படி குழிக்குள் மாட்டிக்கொண்ட 4 பேரையும் மனிதநேயத்துடன் காப்பாற்றி உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த உதவி ஆய்வாளர் ராஜபிரபு தலைமையிலான தனிப்படை போலீசாரை அப்பகுதி மக்கள் அனைவரும் பாராட்டினர். இதையறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் சற்றும் தாமதிக்காமல் உடனடியாக மீட்டு 4 உயிர்களை காப்பாற்றிய மேற்படி தனிப்படை போலீசாரை வெகுவாக பாராட்டினார்.

No comments:

Post a Comment

Post Top Ad