திருச்செந்தூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட 3ஆம்னி சொகுசு பஸ்கள் பறிமுதல்! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 20 October 2023

திருச்செந்தூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட 3ஆம்னி சொகுசு பஸ்கள் பறிமுதல்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இயங்கிய 3தனியார் ஆம்னி சொகுசு பேருந்துகளை சாலை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர் விடுமுறை நாட்களையொட்டி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தனியார், அரசு அலுவலகங்கள், சொந்த தொழில் செய்பவர்கள் சொந்த ஊருக்கு செல்லுவது வழக்கம்.


இதனையடுத்து தனியார் ஆம்னி சொகுசு பேருந்துகள் டிக்கெட்டுகளுக்கு கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி வாங்கி வருவதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர். இந்நிலையில் திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் முனுசாமி உத்தரவின் பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர் பெலிக்ஸன் மாசிலாமணி மற்றும் பறக்கும் படை அதிகாரி தனபால் திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 


அப்போது அதிக பயண கட்டணம், அனுமதி சீட்டு இல்லாமலும் சாலை வரி செலுத்தாமலும்  இயங்கிய 3ஆம்னி சொகுசு பேருந்துகளை பறிமுதல் செய்தனர். 


- தமிழக குரல் செய்திகளுக்காக- சுந்தரராமன்  

No comments:

Post a Comment

Post Top Ad