சாயர்புரம் - சட்டவிரோதமாக வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 பேர் கைது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 23 October 2023

சாயர்புரம் - சட்டவிரோதமாக வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 பேர் கைது.

தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம் பகுதிகளில் சட்டவிரோதமாக வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 பேர் கைது - அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டு எண்களை எழுதி வைத்திருந்த நோட்டுகள், ஒரு செல்போன், ரூபாய் 4,200/- பணம் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல்.


சாயர்புரம் காவல் நிலைய ஆய்வாளர் மேரி ஜெமிதா தலைமையில் உதவி ஆய்வாளர் தேவசகாயம் மற்றும் போலீசார் நேற்று (22.10.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது சாயர்புரம், செபத்தையாபுரம் பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே மற்றும் ராமசாமிபுரம் பகுதியில் உள்ள பாலம் அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் செபத்தையாபுரம் கிழக்கத்தி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஜெயராஜ் மகன் ஈஸ்வரபிரபு (38) மற்றும் சாயர்புரம் வலசக்காரன்விளையைச் சேர்ந்த பிச்சைமணி மகன் நவராஜா (46) என்பதும் அவர்கள் சட்டவிரோதமாக வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.


உடனே மேற்படி போலீசார் எதிரிகளான ஈஸ்வரபிரபு மற்றும் நவராஜா ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த லாட்டரி சீட்டு எண்களை எழுதி வைத்திருந்த நோட்டுகள், ஒரு செல்போன், ரூபாய் 4,200/- மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து சாயர்புரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி ஈஸ்வரபிரபு மீது ஏற்கனவே சாயர்புரம் காவல் நிலையத்தில் லாட்டரி சீட்டு விற்பனை சம்பந்தமாக 9 வழக்குகளும், எதிரி நவராஜா மீது ஏற்கனவே சாயர்புரம் காவல் நிலையத்தில் லாட்டரி சீட்டு விற்பனை சம்பந்தமாக 12 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad