ஆறுமுகநேரி - கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 23 October 2023

ஆறுமுகநேரி - கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது - 20 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்.


ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் தலைமையில் உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் நேற்று (22.10.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காயல்பட்டினம் பகுதியில் உள்ள ரயில்வே ஸ்டேஷன் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் காயல்பட்டினம் பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் கார்த்திக் ராஜா (20) மற்றும் ஆறுமுகநேரி பேயன்விளை பகுதியை சேர்ந்த பால்ராஜ் மகன் செல்வக்குமார் (20) ஆகியோர் என்பதும் அவர்கள் விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.


உடனே மேற்படி போலீசார் எதிரிகளான கார்த்திக் ராஜா மற்றும் செல்வகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 20 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்த ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad