தூத்துக்குடி, தெர்மல்நகரில் இருசக்கர வாகனத்தை திருடிய 2 பேர் கைது - திருடப்பட்ட ரூபாய் 90,000/- மதிப்புள்ள இருசக்கர வாகனம் மீட்பு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 17 October 2023

தூத்துக்குடி, தெர்மல்நகரில் இருசக்கர வாகனத்தை திருடிய 2 பேர் கைது - திருடப்பட்ட ரூபாய் 90,000/- மதிப்புள்ள இருசக்கர வாகனம் மீட்பு.

தூத்துக்குடி, தெர்மல்நகர் கேம்ப் I பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் செந்தில்குமார் (37) என்பவர் கடந்த 28.03.2023 அன்று தனது இருசக்கர வாகனத்தை தெர்மல்நகர் கேம்ப் I பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நிறுத்தி விட்டு பின்னர் வந்து பார்க்கும்போது அந்த இருசக்கர வாகனம் திருடுபோயுள்ளது.


இதுகுறித்து செந்தில்குமார் அளித்த புகாரின் பேரில் தெர்மல்நகர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் திருநெல்வேலி மாவட்டம் பேட்டை எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த பாபு மகன் சதீஷ் (20) மற்றும் திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் சிலுவை (26) ஆகிய 2 பேரும் சேர்ந்து மேற்படி செந்தில்குமாரின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது.


இதனையடுத்து தெர்மல்நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரிச்சர்ட் ஜோசப் மற்றும் போலீசார் சதீஷ் மற்றும் சிலுவை ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூபாய் 90,000/- மதிப்புள்ள இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து தெர்மல்நகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad