தூத்துக்குடி சிப்காட் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 25 September 2023

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது.


தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவர் கைது - 25 கிராம் கஞ்சா பறிமுதல். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் தலைமையில் உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் போலீசார் நேற்று (24.09.2023) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முருகேசன்நகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த லிங்கராஜ் மகன் பொன்ராஜ் (எ) ராசு (23) என்பதும், அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.


உடனே மேற்படி போலீசார் எதிரி பொன்ராஜ் (எ) ராசு கைது செய்து அவரிடமிருந்த 25 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி பொன்ராஜ் (எ) ராசு மீது ஏற்கனவே தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் திருட்டு உட்பட 4 வழக்குகளும், புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 5 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad