தூத்துக்குடி மட்டக்கடை வீட்டின் முன் கதவை எரித்து சேதம் - 4 பேர் கைது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 25 September 2023

தூத்துக்குடி மட்டக்கடை வீட்டின் முன் கதவை எரித்து சேதம் - 4 பேர் கைது.

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மட்டக்கடை பகுதியைச் சேர்ந்த ஜெயசேகரன் மனைவி ஜான்சி (67) என்பவரது வீட்டிற்கு நேற்று (24.09.2023) அதிகாலை வந்த மர்ம நபர்கள் அந்த வீட்டின் முன் கதவை மண்ணெண்ணெய் நிரப்பிய பீர் பாட்டிலால் எரித்து சேதப்படுத்தி சென்றுள்ளனர். இதுகுறித்து ஜான்சி அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.


இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த் தலைமையில் தெர்மல்நகர் காவல் நிலைய தலைமை காவலர் மாணிக்கராஜ், முதல் நிலை காவலர் மகாலிங்கம், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர் செந்தில்குமார், முத்தையாபுரம் காவல் நிலைய முதல் நிலை காவலர் சாமுவேல், காவலர் முத்துப்பாண்டி மற்றும் தென்பாகம் காவல் நிலைய காவலர் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தூத்துக்குடி உட்கோட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் மகன் அருண்குமார் (22), தூத்துக்குடி கீழ சண்முகபுரத்தை சேர்ந்த ராஜா மகன் ஸ்ரீவிக்னேஷ் (20), தூத்துக்குடி சங்கரபேரியை சேர்ந்த கலைமணி மகன் உதயகுமார் (25) மற்றும் தாளமுத்துநகர் குமரன்நகரை சேர்ந்த முருகன் மகன் சரவணக்குமார் (27) ஆகிய 4 பேரும் சேர்ந்து மேற்படி ஜான்சியின் வீட்டு கதவை எரித்து சேதப்படுத்தியது தெரியவந்தது.


உடனே மேற்படி தனிப்படை போலீசார் எதிரிகளான அருண்குமார், ஸ்ரீவிக்னேஷ், உதயகுமார் மற்றும் சரவணகுமார் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad