மூலவரை தரிசனம் செய்த பின்னர் ஷண்முகர், மேதா தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்தார்.பின்னர் கோவில் பிரகாரத்தில் உள்ள சத்ரு சம்ஹார மூர்த்தி சன்னிதியில் தன் எதிரிகளை வீழ்த்த சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை மற்றும் விஷேஷ பூஜைகளை செய்தார். பின்னர் அவர் செல்லக்கனி விருந்தினர் மாளிகையில் கட்சி நிர்வாகிகள் சந்தித்தார்.


நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்பி.சண்முகநாதன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் முன்னாள் தக்காரும், மாவட்ட அம்மா பேரவை தலைவருமான கோட்டை மணிகண்டன் பூரண கும்ப மரியாதை செலுத்தினார்.
அதிமுக அமைப்பு செயலாளர் சின்னத்துரை, திருச்செந்தூர் ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் சுரேஷ்பாபு,மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், ஆழ்வை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் விஜயக்குமார் அதிமுக நகர கழக செயலாளர் மகேந்திரன், மாவட்ட பிரதிநிதி சுந்தர், திருச்செந்தூர் யூனியன் கவுன்சிலர் ரெஜிபர்ட் பர்னாந்து, ஒன்றிய அம்மா பேரவை துணை செயலாளரும், திருச்செந்தூர் வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குநருமான டாக்டர் என்.சுரேஷ், உடன்குடி இளைஞரணி தலைவர் திருமலை வாசன், உடன்குடி ஒன்றிய அம்மா பேரவை செயலாளரும், நங்கைமொழி ஊராட்சி தலைவருமான விஜயராஜ், ஆலந்தலை சுனாமி நகர் நகர மகளிரணி செயலாளர் வேலம்மாள், மாவட்ட இளைஞரணி தலைவர் குணசேகரன், உடன்குடி நகர கழகச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், அதிமுக முன்னாள் இளைஞரணி செயலாளர் அமிர்தா எஸ்.மகேந்திரன், உடன்குடி ஒன்றிய இளைஞர் அணி பொருளாளர் ராம்குமார், ஒன்றிய விவசாய அணி செயலாளர் ராஜதுரை, வழக்கறிஞர் அணி அஜித்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஊராட்சி கழக செயலாளர் ராபின் உட்பட கட்சி உறுப்பினர்கள் மற்றும் மகளிரணியினர் உட்பட நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனா்.
.jpg)
No comments:
Post a Comment