தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், குரும்பூர் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை இருப்பதாகவும், இதனை தீர்ப்பதற்கு கூடுதல் நீர்தேக்கத்தொட்டி அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் குரும்பூர் வடக்கு முஸ்லிம் தெருவில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடந்தது.


பஞ்சாயத்து தலைவர் பானுப்பிரியா பாலமுருகன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆழ்வை யூனியன் சேர்மன் ஜனகர் அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார். இதில் பஞ்சாயத்து செயலர் கிருஷ்ணம்மாள், பாலமுருகன், வார்டு உறுப்பினர்கள், ஒப்பந்ததாரர் ரமேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி பணிகள் முடிந்தால் குரும்பூர் அன்புநகர், வடக்கு முஸ்லிம் தெரு, குரும்பூர் மெயின் ரோடு போன்ற பகுதிகளில் குடிநீர் தேவை பூர்த்தியாகும் என்று பஞ்சாயத்து தலைவர் பானுப்பிரியா பாலமுருகன் தெரிவித்தார்.

No comments:
Post a Comment