தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள திரு.இராமையா பாகவதர் நினைவு நிலை செந்தில் முருகன் நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் ஆசிரியர்கள் வழங்கி வரவேற்றனர், திருச்செந்தூர் திரு.இராமையா பாகவதர் நினைவு நிலை செந்தில் முருகன் நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் ஆசிரியர் வழங்கினார்கள்!

2023, 2024 கல்வி ஆண்டின் பள்ளி துவக்கநாள் மாணவர்கள் மிக மகிழ்ச்சியாகவும் ஆர்வமாகவும் பள்ளிக்கு வருகை புரிந்தனர், மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தலைமையாசிரியர் இனிப்புகள் மற்றும் அரசு வழங்கிய விலையில்லா பாட நூல்கள் மற்றும் நோட்டுகளை வழங்கினார்கள். மேலும் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரையை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சுபா, ஆசிரியர்கள்,மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment