தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கள்ளச் சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு,கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப் பொருட்கள் புழக்கம் உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்தத் தவறிய ஆளும் திமுக அரசைக் கண்டித்தும் இவைகளுக்கு முழு பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் அதிமுக சார்பில் மே 29-ம் தேதி ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடைபெறும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.அதன்படி தூத்துக்குடியில் சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன்,
முன்னாள் அமைச்சரும் மாநில அமைப்பு செயலாளருமான சி.த.செல்லப் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்று திமுக அரசுக்கு எதிராகவும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வலியுறுத்தியும் கண்டன உரையாற்றினர்.கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை ஏற்று பேசுகையில் "தமிழகத்தின் இரண்டாண்டு ஆட்சியை முதலமைச்சர் ஸ்டாலின் இருண்ட ஆட்சியாக மாற்றிவிட்டார்.
சமீபத்தில் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபான விற்பனையால்
20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள். இந்த குற்றச் செயல்களை தடுக்க தவறிய திமுக அரசு இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் கொடுத்ததோடு விற்றவர் குடும்பத்திற்கும் நிவாரணம் கொடுத்து கள்ளச்சாராய குற்றங்களை ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது .
மேலும் இதற்கான துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றுவிட்டார். தமிழகத்தில் ஒரே வருடத்தில் 11 மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்து கல்லூரிக்கு நிதி ஒதுக்கியவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இரண்டு ஆண்டில் மூன்று முக்கிய மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான அங்கீகாரத்தை இழந்ததுள்ளது இன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் சாதனை என்றும் வரும் காலத்தில் எடப்பாடியாரின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வந்தால் அது தான் தமிழகத்தில் பொற்காலம் என்றும் பேசினார்.ஆர்ப்பாட்டத்தில், மாநில எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆறுமுக நயினார், அமைப்பு செயலாளர் சின்னதுரை, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், முன்னாள் மாவட்ட செயலாளர் ஹென்றி, மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், ஒன்றியச் செயலாளர் காசிராஜன், யூனியன் சேர்மன் வசந்தாமணி, மாவட்ட துணைச் செயலாளர்கள் சந்தனம், செரினா, மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் வீரபாகு, 39வது வார்டு வட்ட செயலாளர் திருச்சிற்றம்பலம், வக்கீல் மந்திர மூர்த்தி, முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, பகுதி செயலாளர்கள் பொன்ராஜ், ஜெய்கணேஷ், முருகன், முன்னாள் துணை மேயர் சேவியர், சார்பு அணி செயலாளர்கள் வக்கீல் சேகர், நடராஜன், விக்னேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment