மேலூர் ரயில் நிலையம் மாற்றம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 26 May 2023

மேலூர் ரயில் நிலையம் மாற்றம்.


தூத்துக்குடி, மேலூர் ரயில் நிலையமானது 2வது ரயில்வே கேட் அருகே செயல்பட்டு வந்தது, நகர எல்லைக்குள் போக்குவரத்து நெரிசல் காரணமாகவும், நிர்வாக காரணமாகவும் தற்போது புதிய பேருந்து நிலையம் அருகே அதாவது 4வது ரயில்வே கேட் அருகே மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில் நிலையம் நாளை 27.05.2023 காலை முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. சென்னையில் இருந்து தூத்துக்குடி வரும் முத்துநகர் விரைவு ரயில் இந்த ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

ஏற்கனவே மேலூர் ரயில் நிலையத்தில் நின்று சென்ற தூத்துக்குடி - திருநெல்வேலி, திருநெல்வேலி - தூத்துக்குடி பாசஞ்சர் ரயில்கள், தூத்துக்குடி- மணியாச்சி, மணியாச்சி - தூத்துக்குடி பாசஞ்சர் ரயில்கள் அனைத்தும் புதிதாக செயல்பட உள்ள மேலூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


No comments:

Post a Comment

Post Top Ad