தூத்துக்குடி தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி 61, ஒட்டப்பிடாரம் 88,கயத்தாறு 16, கோவில்பட்டி 22,புதூர் 83 மற்றும் விளாத்திகுளம் 93 ஒன்றியங்களைச் சார்ந்த 363 குடியிருப்புகளுக்கான தாமிரபரணி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு கூட்டு குடிநீர் திட்டம் ஜல்ஜீவன் மிஷன் 515.72 கோடி திட்டத் தொடக்க விழா மாப்பிள்ளையூரணி ஊராட்சி ராமதாஸ் நகர் சிலோன் காலனியில் நடைபெற்றது.விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாடு துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன் வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை துறை பராமரிப்பு அமைச்சர் அனிதா.ஆர். ராதா கிருஷ்ணன்,விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன், ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் செந்தூர் பாண்டி வரவேற்புரை ஆற்றினார்.எம்பி கனிமொழி ஜல்ஜீவன் மிஷன் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டில் பேசுகையில்" இந்த குடிநீர் திட்டத்தின் மூலம் சுமார் 5 லட்சம் குடும்பங்கள் குறிப்பாக ஒட்டப்பிடாரம்,விளாத்திகுளம்,கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பலன் பெறுவர் என்றும் இந்த பணியை எடுத்துச் செய்பவர்கள் 18 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று போதிலும் ,12 மாதத்திற்குள் முடித்து தருவதாக கூறியிருப்பதாக சொன்னார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முதலமைச்சரின் சிறப்பான இந்த திட்டத்தின் மூலம் மூன்று தொகுதிகள் பலனடையும் வகையில் கனிமொழி எம்பி இதைக் கொண்டு வந்துள்ளார் என்றும் இதன் மூலம் மக்கள் பயனடைவார்கள் தெற்கு பகுதியில் உள்ள திருச்செந்தூர் சாத்தான்குளம் உடன்குடி பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கும் இது போன்ற திட்டத்தை எம்பி உருவாக்கி கொடுத்து அப்பகுதியில் உள்ள குறைகளை நீக்க வேண்டும் என்றும் கூறினார்.அதிலும் குறிப்பாக மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் எப்பொழுது சந்தித்தாலும் குடிதண்ணீர் தட்டுப்பாடு உள்ளது.அதை தீர்க்க வேண்டும் பகுதி மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துக்கொண்டு இருக்கிறார். அதேபோல் ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கரும் கோரிக்கை வைப்பார்.எல்லாம் நிறைவேற்றப்படும் "என்று பேசினார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன் "முதலமைச்சர் இந்த ஆண்டு சிறப்பு நிதியின் மூலம் இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளார் என்றும், இதன் மூலமாக பல்வேறு கிராம மக்கள் பயனடைவார்கள் என்றும் நம்முடைய முதலமைச்சர் நீர் ஆதாரங்களை உருவாக்குவது மட்டுமின்றி அது பராமரித்தலில் நீர் செல்லும் திட்டம் முறையாக செயல்படுத்த வேண்டும் என்று நினைப்பவர் என்று பேசினார்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகிறியில் ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார்,இளைஞர் அணி துணை அமைப்பாளர் அம்பாசங்கர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரி முத்து,ஊராட்சிகள் உதவி இயக்குனர் உலகநாதன்,உதவி நிர்வாக பொறியாளர்கள் மகேஷ் குமார் மணி ஜான் செல்வன் உதவி பொறியாளர்கள் முயற்சி ஆனந்தவல்லி குடிநீர் வடிகால் வாரிய பராமரிப்பு கூட்டம் நிர்வாகப் பொறியாளர் ராமசாமி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தா ஹெலன் பொன்மணி கே எம் பிரைவேட் லிமிட் நிர்வாக இயக்குனர் ராமச்சந்திரன் உதவி நிர்வாக பொறியாளர் ராஜா ஆகியோர் நன்றியுரை ஆற்றினர்.
No comments:
Post a Comment