தமிழ்நாடு சத்துணவு ,அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 2 April 2023

தமிழ்நாடு சத்துணவு ,அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சத்துணவு ,
அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு, தூத்துக்குடி மாவட்டம் சார்பில் சிதம்பர நகர் பஸ்நிறுத்தம் அருகில் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சொ.ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர்கள் சாதகன்,அந்தோணியம்மாள்,மரியம்மாள்,முருகேசன்,அழகுக்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சத்துணவு ஊழியர்சங்க மாவட்ட செயலாளர் ஜெயலட்சுமி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட நிதிக்காப்பாளர் பாக்கியசீலி ஆர்ப்பாட்டத்தை துவக்கிவைத்தார். 
ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் சங்கம்  சார்பில் த.எபனேசர் டேனியல் தனராஜ், கு.மரிய அந்தோணி ரூஸ்வெல்ட்(TNGPU) ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாவட்டதலைவர் உத்தண்டராமன்,சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைதுதலைவர் கனகவேல் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.வருவாய் கிராம ஊழியருக்கு இணையாக மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.6,750 அகவிலைப்படியுடன் சேர்த்து வழங்க வேண்டும். அரசுத்துறை காலிப்பணியிடங்களில் தகுதியுள்ள சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்டத்துடன் இணைத்து, சத்துணவு ஊழியர்களைக் கொண்டே செயல்படுத்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் TNAWAA,TNNMEUசார்பில் 448 
 சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள்,சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள்,சத்துணவு பிரிவு ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பங்கேற்றனர். சத்துணவுப்
பணியாளர் சங்கம் சார்பில் ஓ.பலவேசம் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad