தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சியில் இயங்கி வரும் சந்திரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் அ. தி.மு. க முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான
கடம்பூர் செ. ராஜூ தலைமையில் நடைபெற்றது. விழா வின் சிறப்பு விருந்துனராக கலந்து கொண்டு பள்ளி மாணவர்கள் செல்போன் பற்றிய நன்மை,தீமைகள் யோக கலை , சிலம்பம் குறித்து எடுத்துக் கூறினார். பின்னர் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வரும் பள்ளி ஆண்டு விழா
நிகழ்ச்சியில் குழந்தைகள் பலரும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment