மாவட்ட ஆட்சித்தலைவர், மேயர் அரசு பொறியியல் கல்லூரியில் புதுமைப்பெண் திட்டம் துவக்கி வைத்தனர் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 9 February 2023

மாவட்ட ஆட்சித்தலைவர், மேயர் அரசு பொறியியல் கல்லூரியில் புதுமைப்பெண் திட்டம் துவக்கி வைத்தனர்

தமிழ்நாடு அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும்,
அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்காக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ. 1000 உதவித்தொகை வழங்கிடும் 'புதுமைப்பெண்' திட்டத்தை 08.02.23 அன்று இரண்டாம் கட்டமாக திருவள்ளூர் மாவட்டம் - இந்துக் கல்லூரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்து விழாப்
பேருரையாற்றினார்.  
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் பொன்முடி, பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் ஆகியோர் முன்னிலை வகிக்கித்தனர்.
அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில் 'புதுமைப்பெண்' திட்டத்தை துவக்கி வைத்து முதலாமாண்டு மாணவிகளுக்கு வங்கி கணக்கு அட்டைகளை வழங்கினர். இதில் 572 பயனாளிகள் பயனடையவுள்ளனர். 
நிகழ்வில் சார் ஆட்சியர் கௌரவ் குமார், மாவட்ட சமூக நல அலுவலர்  ரதிதேவி, வட்டாட்சியர் செல்வகுமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் துரைராஜ், பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் பீட்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment

Post Top Ad