கொங்கராயகுறிச்சி,ஆறாம்பண்ணை, ஆழ்வார்கற்குளத்தில் பொங்கல் பரிசுதொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 10 January 2023

கொங்கராயகுறிச்சி,ஆறாம்பண்ணை, ஆழ்வார்கற்குளத்தில் பொங்கல் பரிசுதொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி

தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல்பரிசு  மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்க தொகை வழங்கும் விழா. தூத்துக்குடி மாவட்டம்  ஸ்ரீவைகுண்டம் வட்டத்திற்கு உட்பட்ட கருங்குளம் ஒன்றியம் ஆறாம் பண்ணை ஊராட்சியில் அமைந்துள்ள நியாய விலை கடையில் பொங்கல் பரிசுதொகுப்பு  வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ஆழ்வார் கற்குளம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர்  அய்யாதுரை பாண்டியன் தலைமையில் ஆறாம் பண்ணை ஊராட்சி மன்ற தலைவர் சேக் அப்துல்காதர்முன்னிலையில் கருங்குளம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் பள்ளிவாசல் செயலாளர் அப்துல் கனி. வார்டு உறுப்பினர் இப்ராஹிம், நியாய விலை கடை ஊழியர் சீனி, கருங்குளம்  ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் அப்துல் கரீம்,ஆறாம் பண்ணை காங்கிரஸ் நிர்வாகிகள் மைதீன் பிள்ளை, மாரியப்பன் ஆறாம்பண்ணை திமுக நிர்வாகிகள் இப்ராஹிம்,ஜின்னா,அப்துல் காதர்,வக்கீல் சங்க நிர்வாகி பாஹிம்,மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து கொங்கராய்குறிச்சி நியாய விலை கடையில் பொங்கல் பரிசுத்த தொகுப்பு  வழங்கப்பட்டது.இதில் கொங்கரா குறிச்சி நியாய விலை கடை ஊழியர் ஆழ்வார்,ஒன்றிய கவுன்சிலர் மைமுன் அப்துல் கரீம். கொங்கராங்குறிச்சி பஞ்சாயத்து தலைவர் ஆபிதா அப்துல் சலாம்,முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜாகிர் உசேன்,மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து ஆழ்வார் கற்குளம் நியாய விலை கடையில்பொங்கல் பரிசு தொப்பு வழங்கப்பட்டது.இதில் நியாய விலை கடை ஊழியர் உலகநாதன்,ஆழ்வார் கற்குளம்  பஞ்சாயத்து தலைவர் வி.மலை மேகலை, ஒன்றிய கவுன்சிலர் வசந்தி முருகன், திமுக கிளைச் செயலாளர் அருணா மற்றும் ஊர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad