ஜனவரி 10 முதல் பிப்ரவரி 14 வரை தூத்துக்குடியில் குழந்தைகள் முதல் 18 வயது உள்ள மாற்றுத் திறனாளிமாணவ, மாணவியருக்கான இலவச மருத்துவ முகாம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 10 January 2023

ஜனவரி 10 முதல் பிப்ரவரி 14 வரை தூத்துக்குடியில் குழந்தைகள் முதல் 18 வயது உள்ள மாற்றுத் திறனாளிமாணவ, மாணவியருக்கான இலவச மருத்துவ முகாம்.

குழந்தைகள் முதல் 18 வயதினர் வரை உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாமை தூத்துக்குடி ஜின் பேக்டரி சாலையில் உள்ள
மாநகராட்சி நடுநிலை பள்ளியில் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார்
முகாமில் பேசிய ஆட்சியர்;
 தமிழக முதல்வர் மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் இன்று முதல் இந்த வாரம்(ஜனவரி 10-பிப்ரவரி 14)முழுவதும் மாவட்டத்தில் உள்ள 12 வட்டாரங்கள் மற்றும் மாநகராட்சி என 13 இடங்களில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முகாமில் எலும்பு முறிவு, காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட ஐந்து சிறப்பு  மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க உள்ளனர். மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரையும் முகாமிற்கு அழைத்து வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன்
அவர்களுக்குரிய குறைபாடு சதவீதம் கண்டறியப்பட்டு அடையாள அட்டை வழங்கப்படவும் உள்ளது. மேலும் அவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கு தேவையான பதிவுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகளின் அனைத்து தரப்பு குறைபாடுகளுக்கும் சிறப்பு மருத்துவர்களால் அமைக்கப்பட்ட முகாமினை மாவட்ட ஆட்சியர் மருத்துவர் செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையாளர் சாரு ஶ்ரீ ஆகியோருடன் பார்வையிட்ட மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், மாற்றுத்திறனாளிகளுக்கென்று நமது அரசு எல்லா வகையிலும் உதவிகள் செய்து வருகின்றன.தூத்துக்குடி மாவட்டத்திலும் பல உதவிகள் செய்யப்பட்டு அவர்களுக்கு தேவையான திட்டங்களையும் உடனுக்குடன் செய்து கொடுக்கப்படுகிறது. சராசரி மனிதர்களை போல் மாற்றுத்திறனாளிகளையும் 
அனைத்திலும் சமமாக மதித்து சுயமரியாதையுடன்  நடத்துகிறது. வரும் காலங்களிலும் இதுபோன்ற சிறப்பு முகாம்கள் முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சியில் தொடரும். அனைத்து துறை மருத்துவர்களை கொண்டு நடத்தப்படும் இந்த முகாமை மாற்றுத்திறனாளிகள் நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். முதலமைச்சர் ஸ்டாலின் மக்கள் நலன் கருதி பணியாற்றி வருகிறார் என்று மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார்.விழாவில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி, சிறப்பு ஆசிரியர் சண்முகம், மேற்பார்வையாளர் பாரதி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன் மற்றும் ஜோஸ்பர், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவர்கள்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad