புதுக்கோட்டை போலீஸ் எல்லைக்கு உள்பட்ட போடம்மாள்புரம், பேய்குளம் இடையிலான சாலையானது புதுக்கோட்டை – சாயர்புரம் செல்லும் பிரதான சாலையாகும். அது, ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசன குளத்தின் கரையில் அமைந்துள்ளது. அது சம்பந்தபட்ட 10 நம்பர் மதகு பகுதிதான் அடிக்கடி விபத்து நடக்கும் பகுதியாக இருந்து வருகிறது.
கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு அந்த சாலையில் வந்த கார் நிலைதடுமாறி சாலையோரத்தில் நிற்கும் மனைமரத்தில் மோதி விபத்திற்குள் ஆனது. இதில் அந்த காரை ஓட்டி வந்த நபர் சம்பவ இடத்திலேயே பலியானார். அதே இடத்தில் நேற்று இடையர்காடு பகுதியில் இருந்து வாழைத்தார் ஏற்றி, பழனிக்கு செல்வதற்காக வந்த மினி லாரி நிலை தடுமாறி விழுந்தது. இதில் பயணம் செய்தவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
விபத்துக்கள் குறித்து விசாரித்த போது அப்பகுதியினர், அந்த சாலையை விரிவாக்கம் செய்தபோது, 10 நம்பர் மடையையும் விரித்தனர். அது இப்போது ரோட்டை விட்டு பல அடி தூரத்தில் இருக்கிறது. அதில் மோதாமல் இருக்க போடப்பட்ட தடுப்புகள் இன்னும் அகற்றபடவே இல்லை. அந்த தடுப்புகளே இப்போது விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. மேலும் அந்த ரோடு சற்று வளைவாக இருப்பதால் விரைவாக வரும் வாகனங்கள் திடீரென நிலைதடுமாறும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே வளைவாக உள்ள அந்த சாலையை நேராக ஆகும்படி செய்ய வேண்டும்.
அதற்கு நெடுஞ்சாலைத்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிக்கடி விபத்து நடப்பதை எங்களால் பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை’’என்கின்றனர்.இனிமேலாவது உரிய நடவடிக்கை எடுக்குமா நெடுஞ்சாலைத்துறை எனபொதுமக்கள் எதிர்பார்ப்பு.
No comments:
Post a Comment