கழிவு நீர் பிரச்சனை, பக்கத்து வீட்டுக்காரரை வெட்டியவர் கைது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 28 February 2022

கழிவு நீர் பிரச்சனை, பக்கத்து வீட்டுக்காரரை வெட்டியவர் கைது.

முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த இசக்கிபாண்டி (23), த/பெ. சேதுபாண்டி, கிழக்கு தெரு, சென்னல்பட்டி என்பவருக்கும் இவரது பக்கத்து வீட்டுக்காரரான அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் (55), த/பெ. சப்பாணி, கிழக்குத் தெரு, சென்னல்பட்டி என்பவரது மனைவி மாரியம்மாள் (47) என்பவருக்கும் வீட்டுக் கழிவு நீர் செல்வது சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது இசக்கிபாண்டி மாரியம்மாளை கம்பால் தாக்கியுள்ளார். 


இதனையடுத்து  செல்வம், நேற்று (27.02.2022) சென்னல்பட்டி பேருந்து நிறுத்தத்தில் வைத்து இசக்கிபாண்டியை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இசக்கிபாண்டி செல்வத்தை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து செல்வம் அளித்த புகாரின் பேரில் முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து எதிரி இசக்கிபாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad