நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் 'மிஷன் இயற்கை' திட்ட சிறப்பு நிகழ்ச்சி. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 4 December 2024

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் 'மிஷன் இயற்கை' திட்ட சிறப்பு நிகழ்ச்சி.

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் 'மிஷன் இயற்கை' திட்ட சிறப்பு நிகழ்ச்சி.

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மிஷன் இயற்கை திட்ட சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பள்ளிகளின் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் மிஷன் இயற்கை திட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

அதன் ஒரு பகுதியாக, நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பனை பொருட்கள் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை வகித்தார். தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல சுற்றுச்சூழல் கரிசனத்துறையின் இயக்குனர் கனம். ஜாண் சாமுவேல் முன்னிலை வகித்தார்.இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் வரவேற்றார்.

தமிழ்நாடு பனைத் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர் கனம்.காட்சன் சாமுவேல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். பனை ஓலையில் பள்ளி மாணவர்களுக்குத் தேவையான பொருட்கள் செய்வது, குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள் செய்வது, பனை நாரில் பைகள் செய்வது, வர்ணங்கள் பூசப்பட்ட பனை ஓலையில் பொருட்கள் செய்வது குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. 

பனை ஓலையில் செய்யப்பட்ட தொப்பி மற்றும் பனை நாரில் செய்யப்பட்ட பெரிய பை ஆகியவை மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டன. மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியின் தேசிய பசுமை படை மற்றும் பசுமை மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், ஓவியக்கலை ஆசிரியர் அலெக்ஸன் கிறிஸ்டோபர் ஆகியோர் கலந்து கொண்டனர். உடற்கல்வி ஆசிரியர் தனபால் நன்றி கூறினார். 

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் நீர் பாதுகாப்பு மேலாண்மை, சொட்டு நீர் பாசனம் மற்றும் மூலிகை தோட்டம் ஆகியவை மிஷன் இயற்கை திட்டத்தின் கீழ் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தாளாளர் சுதாகர் வழிகாட்டுதலின்படி உதவி தலைமை ஆசிரியை சாரா ஞானபாய், உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம்,தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் அம்புரோஸ் சுகிர்தராஜ், தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வ சுந்தர், பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad