பரமன்குறிச்சி கிளை நூலகத்தில் நூலக வார விழா, சிறந்த வாசகர்களுக்கு பரிசளிப்பு விழா, போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா இன்று நடைபெற்றது.
மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. நூலகர் இராஜதுரை அனைவரையும் வரவேற்றார்.மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் ஒப்புவித்தல், பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, செவ்வியல் பாடல் போட்டி, பல குரல் போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
மாணவிகள் முத்துசுவேதா, கார்த்திகா,ஜெனிஸ்கா ஆகியோரின் பேச்சும் கீர்த்தனாவின் செவ்வியல் பாடல் மற்றும் மாணவர் யோகேஷின் பல குரல் ஆகியவை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.சிறப்பு விருந்தினராக மாவட்ட இரண்டாம் நிலை நூலகர் பாலமுருகன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
சிறந்த வாசகர்கள் கார்த்திகா,வர்சினி, சர்மிளா மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் கொடையாளர் லட்சுமி தர்ம சீலன் பரிசுகளை வழங்கினார்.போட்டிகளை சிறப்பாக நடத்தி கொடுத்த போட்டித்தேர்வு மாணவ/மாணவிகள் ஜெகன், உத்திரக்குமார், நந்தினி, பவானி,சாது, சுரேஷ், விஜய் ஆகியோருக்கு நூலகர் பாலமுருகன் நினைவு பரிசுகளை வழங்கினார்.
விழாவில் ஆசிரியைகள் வனிதா, எலிசபெத்,ஜெபசீலி,ஞானப்பட்டு மற்றும் நூலகப் பணியாளர்கள், ஆர்வலர்கள் சுமித்ரா,சுஜிதா,செந்தாமரை மற்றும் ஏராளமான வாசகர்கள்,மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் வாசகர் வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முன்னதாக நூலகத்திற்கு கூடுதல் கட்டடம் கட்டி கொடுத்த கொடையாளர் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி முன்னாள் இயக்குநர் சத்தியசீலன்,
தொடர்ந்து பல ஆண்டுகளாக வாசகர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கி வரும் இராமச்சந்திரன் குடும்பத்தினருக்கும், பல ஆண்டுகளாக சிறந்த வாசகர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி வரும் தொழில் அதிபர் சுதந்திர சீலன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. விழா முடிவில் வாசகர் வட்ட தலைவர் ஆனந்தன் நன்றி கூறினார்.
தமிழக குரல் செய்திகளுக்காக அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment