கார்த்திகை தீபத்தையொட்டி திருச்செந்தூர் கடற்கரையில் சொக்கப்பனை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 14 December 2024

கார்த்திகை தீபத்தையொட்டி திருச்செந்தூர் கடற்கரையில் சொக்கப்பனை.

கார்த்திகை தீபத்தையொட்டி திருச்செந்தூர் கடற்கரையில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

கார்த்திகை தீபத் திருவிழா நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் 2000 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதேபோல் அனைத்து சிவன் மற்றும் முருகன் கோயில்களிலும் மகா தீபம் மற்றும் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. 

வீடுகளிலும் மக்கள் அகல் விளக்கு ஏற்றி கார்த்திகை தீப திருவிழாவை கொண்டாடினர். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத்திரு விழாவையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து நேற்று மாலை கடற்கரையில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.  கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையிலும் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்

No comments:

Post a Comment

Post Top Ad