அரசு சார்பில் ரூ.4 லட்சத்தில் புதிய வீடு
சேர்மன் பாலசிங் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு பெய்த கனமழையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. பலர் வீடுகள் இடிந்து, உடமைகளை இழந்தனர்.
இதையடுத்து வெள்ளத்தால் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசின் மீளக்கட்டுதல் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஒன்றியத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு ரூ,4 லட்சத்தில் வீடு கட்டிக் கொடுக்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் கீழ் மாநாடு முத்தம்மாள் மகன் பாலமுருகன் என்பவருக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய இல்லத்தை மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, உடன்குடி ஒன்றிய குழு குழு தலைவர் பாலசிங் இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் உடன்குடி மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளர் சுடலை கண்ணு, இசக்கிமுத்து, ஸ்ரீதர் மற்றும் அரசியல் பிரமுகர்கள், வணிகர்கள் ,தொழிலதிபர்கள், ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment