தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் சுப்புராஜ் மற்றும் போலீசார் நேற்று (04.12.2024) திரேஸ்புரம் பண்டுகரை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், அவர்கள் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சேர்ந்த அற்புதராஜ் மகன் மைக்கேல்ராஜ் (30) மற்றும் அவரது சகோதரியான தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த சண்முகசிவா மனைவி ஜெபா (25) ஆகியோர் என்பதும், அவர்கள் விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் எதிரிகளான மைக்கேல்ராஜ் மற்றும் ஜெபா ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 5 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment