நவம்பர்: 14, நாசரேத் சாலமோன் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பித்தது.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 135வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு பள்ளித் தாளாளர் ஜமீன் சாலமோன் தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாகி பியூலா சாலமோன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைவர் எலிசபெத் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
பள்ளி முதல்வர் ஜான்சி கனகராஜ் குழந்தைகள் தினத்தின் செய்தி வழங்கினார். இந்த விழாவில் குழந்தைகள் நேருவின் வேடம் அணிந்து வந்திருந்தனர். பள்ளி ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மற்றும் பிற பணியாளர்கள் நாடகம் நடித்தும், நடனம் ஆடியும் மாணவர்களை மகிழ்வித்தனர். ஆசிரியர்களுக்கு விளையாட்டுப்போட்டி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் மாணவர்கள் நன்றி உரை கூறினர்.
இந்த விழா ஏற்பாட்டினை உடற்கல்வி ஆசிரியர் லாரன்ஸ் உதவி முதல்வர் மாரித்தங்கம் மற்றும் பிற ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இறுதியில் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தேசிய கீதத்துடன் விழா இனிதே முடிவடைந்தது.
No comments:
Post a Comment