இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாரதி நகர் அம்பேத்கர் 3ஆவது தெருவை சேர்ந்த ஜோதிமணி மகன் வடிவேலு (39). இவர், தனது இரு சக்கர வாகனத்தை நேற்று முன்தினம் கதிரேசன் கோவில் சாலையில் உள்ள திருமண மண்டபம் அருகே நிறுத்திவிட்டு, அருகிலுள்ள வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் அவர் திரும்பி வந்து, வண்டியை எடுக்க முயன்றபோது, அதன் பெட்ரோல் டேங்க் கவரில் வைக்கப்பட்டிருந்த கைப்பேசி, ரூ.1000 ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அதில், அதே பகுதி நடுத்தெருவைச் சேர்ந்த ரமேஷ் மகன் மணிகண்டன் (19) என்பவருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
No comments:
Post a Comment